தனுஷ் இயக்கத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர்,மேத்யூ தாமஸ்,வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் போன்ற இளம் பிரபலங்கள் இணைந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் நடித்துள்ளனர். வருகின்ற 21 ஆம் திகதி வெளியாகவுள்ள neek படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
இரண்டு நாட்களின் முன்னர் படத்தின் trailor வெளியாகி ரசிகர்களுக்கு இப் படம் குறித்து ஒரு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கூடியிருந்த ரசிகர்களின் வரவேற்பே இப் படத்தினை வெற்றி அடையச்செய்துள்ளது.
இந்த படத்தின் அறிமுக நடிகர்கள் இப்பொழுது பல மீடியாக்களிற்கு நேர்காணல்கள் கொடுத்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது கொடுத்துள்ள நேர்காணல் ஒன்றில் இப் படம் தனுஷ் சாரின் பியோபிக் மூவியா எனும் கேள்விக்கு தனுஷின் அக்கா மகன் பவிஷ் "எனக்கு தெரிந்தவரை அவ்வாறில்லை சமையல் காரனாக சாதிக்க வேண்டும் என்பது அவரது ஆசைதான் அதை தவிர்த்து வேறொன்றும் பொருந்துவதாக இல்லை " என கூறியுள்ளார்.
Listen News!