• Jan 19 2025

பாலர் தேடிவந்து ரோகிணியை மிரட்டிய பழைய கணக்கு! மனோஜை ஏற்றிவிட்டு செய்த காரியம்! ஆஃப்பான விஜயா

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ஸ்ருதி வீட்டை விட்டு போறதுக்கு காரணம் நீதான். உன்ட புருஷனை தூண்டி விட்டு நீ தான் வேடிக்கை பாக்கிறா என மீனாவை கண்டபடி திட்டுகிறார் விஜயா. இதன் போது மீனா பொறுமையை இழந்து, ஸ்ருதி வாரதுக்கு நீங்க என்ன செய்திங்க? சும்மா பேசிட்டு தான் இருக்கீங்க நான் நேரிலேயே போய் கதைச்சுட்டு வந்துட்டேன் என சொல்லுகிறார். இதைக் கேட்டு விஜயா ஆப் ஆகிறார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ரோகினி என்ன செய்வது என்று தெரியாமல் இடையில் வாயை போட, முத்துவும் பதிலுக்கு இது என்ன ஒரிஜினலா இல்ல டூப்ளிகேட்டா என பதிலடி கொடுக்கிறார். காரணம் நீங்கதானே எல்லாம் பூசி மெழுகுவீங்க என சொல்ல, இதுதான் சான்ஸ் என ஸ்ருதி செஞ்சது தான் சரி இவரோட எப்படி இந்த வீட்ல இருக்க முடியும் என சொல்லிவிட்டு ரோகிணி ரூமுக்கு போகிறார்.

இதைக் கேட்ட விஜயா பாத்தீங்களா இப்படித்தான் எல்லாரும் இந்த வீட்டை விட்டுப் போக போறாங்க. இவங்க மட்டும் எப்படி இங்க சந்தோஷமா இருக்காங்க என்று  நானும் பார்க்கிறேன் என சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து மீனா உடுப்புகளை மடித்து வைத்துக் கொண்டிருக்க அங்கு வந்த முத்து, என்கிட்ட சொல்லாம எப்ப ஸ்ருதியை பார்க்க போன என கேட்க, நீங்க மட்டும் என்கிட்ட சொல்லிட்டா ரவி வீட்டுக்கு போனீங்க, மாமா ரொம்ப கவலை படுறார். முதல்ல ஸ்ருதி, ரவிய இந்த வீட்டுக்கு வர வைக்கணும் அப்படியே ரோகினி அப்பாவையும் வர வைக்கணும் என சொல்ல, ரோகிணி கதைல ஏதோ மர்மம் இருக்கு என்று முத்து சொல்லுகிறார்

மறுபக்கம் ரோகிணியின் பாலருக்கு வந்த PA தான் கல்யாணம் செய்யப் போவதாகவும் அதற்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் எனவும் ரோகிணியிடம் சொல்கிறார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என சொல்ல, உன்ட வீட்டு ஆக்கள்ட  நம்பர் எல்லாம் என்கிட்ட இருக்குது. பொறு இப்ப போன் எடுக்கிறேன் என மிரட்ட, அந்த நேரத்தில் அங்கு மனோஜ் வர உனக்கு காசு தானே வேணும் நான் தாரேன் என அவரை அவசர அவசரமாக அனுப்பி வைக்கிறார். 

உள்ளே வந்த மனோஜ், கனடா வேலைக்கு போக உங்க அப்பா, இல்லை மாமா கிட்ட காசு வாங்கி தா என சொல்ல, ரோகிணி பேசுகிறார். மேலும் உங்க அப்பா, அம்மா கிட்ட போய் கேளு, முத்துவுக்கு கார் வாங்க வீட்டு பத்திரத்தை வச்சு தானே கொடுத்தாங்க என ஏற்றி விடுகிறார்.

அவரும் வீட்டுக்கு வந்து அண்ணாமலை, விஜயாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி கதைக்க, அங்கிருந்த முத்து இது இவன் கதைகல யாரோ சொல்லி தான் கதைக்கிறான் என சொல்ல எல்லாரும் ஷாக் ஆகிறார்கள். இது தான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement