• Jan 19 2025

செருப்பால் அடித்த மீனா? முத்து கொடுத்த அதிர்ச்சி..! சகுனி வேலை பார்த்த விஜயா

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சத்யாவின் பிறந்தநாளுக்கு முத்து போக வேணாம் என சொன்ன போதும் ஸ்ருதி மீனாவை போயிட்டு வருமாறு அனுப்பி வைக்கின்றார். விஜயா இதனை கவனிக்கின்றார்.

மறுபக்கம் சத்யா அக்கா வரமாட்டார் அதனால் ஒன்றும் செய்யத் தேவையில்லை என புறப்பட , அந்த நேரத்தில் மீனா வருவதை பார்த்து சந்தோஷப்படுகின்றார். அதன் பின்பு மீனா சத்யாவுக்கு  விஷ் பண்ணி விட்டு கூழ் காய்ச்சுவதற்கு ஆயத்தம் ஆகின்றார்.

இதை தொடர்ந்து முத்து வீட்டிற்கு வந்து மீனா மீனா என கூப்பிட அங்கே மீனா இல்லை என விஜயா சொன்னதோடு மட்டுமில்லாமல் அவ உன் பேச்சை மீறி அவ  தம்பியை பார்க்க போய்ட்டா நம்பிக்கை இல்லாவிட்டால் போய் கோவில்ல பாரு என ஏற்றி விடுகின்றார்.


முத்துவும் கோவிலுக்கு வந்து பார்க்கும்போது மீனா எல்லாருக்கும் கூழ் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதன் போது முத்துவும் ஒரு கப்பை வாங்கி எடுக்கும்போது மீனா அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றார்.

அத்துடன் என் பேச்சை மீறி வந்து விட்டாய் என எனக்கு செருப்பால அடித்த மாதிரி இருக்குது என்று சொல்லி அங்கு வைத்தே பிரச்சனை செய்துவிட்டு வருகின்றார் முத்து. அதன் பின்பு நைட் முத்து குடித்துவிட்டு வந்து தன் பேச்சை மீறியதாக மீனாவுடன் கோபப்பட்டு பேசுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement