• Sep 07 2024

பாக்கியா கேட்ட கேள்விக்கு ஈஸ்வரி சொல்ல போகும் பதில் என்ன? குஷியில் கோபி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி ராதிகாவுடன் பேச வேண்டும் என சொல்ல, அவர் காதில் எதையும் வாங்காமல் உங்க வீட்டு விஷயத்தை என்னிடம் சொல்ல வேண்டாம் என அவருக்கு சாப்பாட்டை கொண்டு போய் வைக்கின்றார். 

அதை பார்த்து நான் என்ன சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தானே இருக்கிறேன் எனக் கோபத்தில்  சாப்பாட்டை தட்டி விடுகின்றார். இதை பார்த்து மையூ  பயப்பட மையூவிடம் சாரி கேட்கின்றார். அந்த நேரம் ராதிகா இதுவே  இனியாவாக இருந்தால் இப்படி செய்வீர்களா என்றும் இது என்னுடைய பிள்ளை எனவும் வாதாடுகிறார்.

அதன்பின் செழியன் வாக்கிங் போகும்போது எழிலுக்கு கால் பண்ணி நலம் விசாரித்ததோடு மீண்டும் வீட்டை வருமாறு சொல்ல , எழில் மறுக்கின்றார். அத்துடன் எதுவும் உதவி என்றால் என்னிடம் கேளு என்று கதைக்கின்றார் . இதன்போது கோபி அங்கே வர அவரும் எழிலை பார்த்த விஷயத்தை பற்றி பேசுகின்றார். இதன் போது செழியன் எனக்கு மீண்டும் குழந்தை பிறக்க உள்ளதாக கோபியிடம் சொல்ல, அவர் ரொம்பவும் சந்தோஷப்படுகிறார் .


இதை தொடர்ந்து செழியன் பாக்கியாவிடம் தாத்தாவின் பர்த்டே கொண்டாடுவதற்கு மூன்று ஹோட்டல் பார்த்ததாக சொல்ல, ஹோட்டலில் செய்வதற்கு நாள் காணாது ஒரு நாள் தானே இருக்குது பக்கத்து கோவிலிலேயே செய்யலாம் அத்தை கிட்ட சொல்லலாம் என்று பாக்கியா சொல்லுகின்றார்.

அந்த நேரத்தில் ஈஸ்வரி அங்கு வர, பாக்கியா மாமாவின் பிறந்தநாளுக்கு எல்லாரையும் அழைத்து கோவிலில் கொண்டாடலாம் என முடிவெடுத்து இருக்கோம் நீங்க என்ன சொல்றீங்க எனக் கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement