தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக திகழும் சென்னை சர்வதேச திரைப்பட விழா, இந்த ஆண்டு 23வது ஆண்டை எட்டியுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக சென்னை திரையரங்குகளில் 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த திரைப்படங்களை ஒரே மேடையில் காணக்கூடியது அரிய வாய்ப்பு என்பதால், சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைப்பட தொழில்நுட்ப நிபுணர்கள், இயக்குநர்கள் என அனைவரும் இந்த விழாவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், தற்போதைய தகவலின்படி, 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகின்ற டிசம்பர் 11 முதல் 18 வரை நடைபெற உள்ளது.

சினிமா என்பது மொழிகளின் எல்லைகளையும், நாடுகளின் எல்லைகளையும் தாண்டி, கலை, உணர்வு, கலாச்சாரம் ஆகியவற்றை உலகளவில் பரவச் செய்யும் சக்தியுடையது. இத்தகைய பன்முக பார்வை கொண்ட திரைப்படங்களை ஒன்றாக அனுபவிக்கச் செய்யும் விழா இதுவாகும். இத்தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!