• Feb 01 2026

‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தைப் பாராட்டிய நடிகை ஜான்வி கபூர்.! இன்ஸ்டாவில் வைரலான பதிவு.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

ஹிந்தி மற்றும் பல மொழிகளில் நவம்பர் 7, 2025 அன்று வெளியாகிய ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தி கேர்ள் பிரண்ட்’ திரைப்படம் அதிகளவான ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


சமீபத்தில், நடிகை ஜான்வி கபூர் இப்படத்தை பார்த்த பின்னர் தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவரின் ரிவ்யூ சுருக்கமாக இருந்தாலும், அதன் பாதிப்பு வாசகர்களை மட்டும் அல்ல, ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


ஜான்வி அதன்போது, “கட்டாயம் பாருங்கள்” என்று ஒரே வரியில் சுருக்கி வெளிப்படுத்தியுள்ளார். ‘தி கேர்ள் பிரண்ட்’ திரைப்படம் வெளியான பின்னர் சமூக ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே அதிரடியான பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்தப் படம் காதல், நட்பு, மற்றும் வாழ்க்கையின் சவால்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. ராஷ்மிகா மந்தனா நடித்த கதாபாத்திரம், சவால்கள் மற்றும் சந்தோஷங்களை எதிர்கொள்கின்ற வகையில் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement