• Aug 22 2025

ஓடிடியில் டிரெண்டிங்கான ஹிட்ஸ்...!மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் 5 படங்கள்...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

இன்றைய காலத்தில் ரசிகர்கள் தியேட்டரைவிட OTT தளங்களை அதிகம் விரும்புகின்றனர். கூட்ட நெரிசலும், டிக்கெட் பிரச்சனைகளும் இல்லாமல் வீட்டிலேயே வசதியாக படங்களை பார்க்க முடிவதுதான் இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த வாரத்தில் ஒளிபரப்பான திரைப்படங்களில் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்ற முன்னணி 5 திரைப்படங்கள்  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.


பிரித்விராஜ் நடித்துள்ள  "சர்சமீன்" மலையாள திரைப்படம் தீவிரமான எமோஷன்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு சூழ்நிலை கதையாக மாறியுள்ளது. இப்போது JioCinema-ல் ரசிகர்களின் விருப்பத்தில் முதலிடத்தில் உள்ளது.

தனுஷின் நடிப்பில் வெளிவந்த  குபேரா படம், ஒரு அதிரடித் த்ரில்லர் கதை. தியேட்டரிலும், ஓடிடியிலும் ஒரே மாதிரியான வரவேற்பைப் பெற்றுள்ளது.மலையாளத்தில் உருவான ரோந்த் இந்த திரைப்படம், ஒரு புதுமையான பொலிஸ் விசாரணைக் கதைக்களத்துடன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


மாதவன் நடித்துள்ள  இந்த ஹிந்தி ஆப் ஜெய்சோ கொய் திரைப்படம், உணர்வுப்பூர்வமான கதையமைப்பினால் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அதர்வா நடிப்பில் வெளிவந்துள்ள DNA  படம், குழந்தை கடத்தலும் மருத்துவ துறையின் சிக்கல்களும் குறித்த ஒரு தீவிரமான படமாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement