• Aug 07 2025

11 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்.. ஹீரோயின் யாரு தெரியுமா?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90 ஆம் ஆண்டுகளில் வெளியான படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் நடிகர் அப்பாஸ். அதிலும் குறிப்பாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம், மின்னலே போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து இளம் பெண்களின் மனதை கொள்ளையடித்திருந்தார்.

அதன் பின்பு திருட்டுப் பயலே என்ற படத்தில் வில்லன் கேரக்டரிலும் நடித்து பலரது கவனத்தை ஈர்த்திருந்தார். ஆனாலும் சினிமாத்துறையில் அப்பாஸுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் சினிமாவில் மார்க்கெட் இல்லாத ஹீரோவாக காணப்பட்டார்.

இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹார்பிக் விளம்பரத்தில் நடித்து தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்திற்காக வெளிநாட்டில் வேலை பார்த்ததாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் தற்போது சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.


இந்த படம் முற்று முழுதாகவே ஒரு பொழுதுபோக்கு படமாக உருவாக    உள்ளதோடு இதில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் மற்றும் லவ்வர் பட நாயகி  ஸ்ரீ கௌரிப்ரியாவும் கமிட் ஆகியுள்ளனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அப்பாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்க உள்ளார்.  

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பூஜைகள் பிரம்மாண்ட முறையில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் வீடியோ ஒன்றையும் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருவதோடு நடிகர் அப்பாஸின் ரீ என்ட்ரிக்காக    தமது வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement