பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஈஸ்வரி பாக்கியாவப் பார்த்து இதை விட பெருசா கல்யாணத்தை செய்திருக்கலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட இனியா நான் இதை விட சிம்பிளா செய்யவேணும் என்று தான் நினைச்சேன் என்கிறார். இதனை அடுத்து எல்லாரும் ஒன்னா சேர்ந்து மண்டபத்தில டான்ஸ் ஆடுறார்கள். மறுநாள் காலையில இனியாவோட கல்யாணத்துக்காக ராதிகாவும் மஜூவும் மண்டபத்திற்கு வந்து நிக்கிறார்கள்.
பின் ராதிகா பாக்கியாவப் பார்த்து இனியாவுக்கு தானே கல்யாணம் நீங்க ஏன் கல்யாண பொண்ணு மாதிரி வெளிக்கிட்டு நிக்கிறீங்க என்று கேட்கிறார். அதைக் கேட்ட பாக்கியா வந்ததுமே ஐஸ் வைக்காதீங்க என்று சொல்லுறார். அதனை அடுத்து கோபி ராதிகாவை பார்த்து life எல்லாம் எப்புடி போய்க்கிட்டு இருக்கு என்று கேட்கிறார். மேலும் உன்ட life-ல யாராவது வந்திருக்காங்களா என்று கேட்கிறார்.
அதுக்கு ராதிகா அப்புடி எல்லாம் யாரும் இல்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து இனியா- ஆகாஷோட கல்யாணம் நல்ல படியாக நடக்குது. அதைப் பார்த்து எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். இதனை அடுத்து மண்டபத்தில இருந்து எல்லாரும் பாக்கியா வீட்டிற்கு போகிறார்கள். அங்க செல்வியோட புருஷன் நல்ல நேரம் தொடங்கிட்டு இனியாவை எங்கட வீட்ட கூட்டிக் கொண்டு போறோம் என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட உடனே பாக்கியா கொஞ்சம் கவலைப்படுறார். பின் செல்வி இத்தன நாள் இனியா உங்கட பிள்ள, இனிமேல் இனியா என்ர பிள்ள என்று பாக்கியாவப் பார்த்துச் சொல்லுறார். இதனை அடுத்து சந்தோசமாக எல்லாரும் இனியாவை வழி அனுப்பிவிடுகிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!