பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 24 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பத்து போட்டியாளர்களே எஞ்சி உள்ளனர். இதனால் இந்த வாரம் டபுள் எலெக்ஷன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 90 வது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இன்றைய தினம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் எபிசோடு என்பதால் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார் மக்கள் செல்வன்.
d_i_a
அதில் அவர் கூறுகையில், நம்ம ஆட்டத்தோட இறுதி கட்டத்தை நெருங்கிட்டோம். பதட்டமும் பரபரப்பும் நம்ம போட்டியாளர்கள் கிட்ட தெரியுது.
அந்த பதட்டத்திலையும் பரபரப்பிளையும் அவங்க ஒரு வேலை செய்றாங்க.. அது நல்லதா கெட்டதா தெரியாது.. ஆனா இனிமேலும் அவங்க எப்படி விளையாட போறது என நாங்க சொல்லப் போறது இல்ல.
ஆனா அவங்க ஏன் அப்படி விளையாடினாங்க.? அத நாம தெரிஞ்சி கொள்ளணும் என ஆடியன்ஸுக்கு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். எனவே இன்றைய தினம் தரமான சம்பவம் இருக்கு என பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!