• Feb 05 2025

ரன்பீர் கபூர் - சாய்பல்லவி நடித்துள்ள ராமாயணம் படத்தின் லேட்டஸ் கிளிக்ஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படும் சாய்பல்லவி நடிப்பில் இறுதியாக அமரன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில்  மேஜர் முகுந்தின் மனைவியாக இந்து ரெபேக்கா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக சிறந்த விருதையும் பெற்றிருந்தார் சாய்பல்லவி.

இதைத்தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் வரலாற்று கதை அம்சம் நிறைந்த ராமாயணம் திரைப்படம் தயாராகி வருகின்றது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமணாகவும், நடிகர் யாஷ் இராவணன் ஆகவும் நடிக்கின்றார்கள்.

d_i_a

ராமாயணம் படம் தொடர்பான புகைப்படங்கள், அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்காக நடிகர் யாஷ் 200 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூர் - சாய்பல்லவியின் அழகிய புகைப்படங்கள்வ வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. பொதுவாகவே சாய் பல்லவி எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் நேச்சுரலாகவே நடிப்பார். தற்போது ராமாயணம் படத்தில் அவர் சீதையாகவே மாறி உள்ளார்.

இதேவேளை, பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்படும் ராமாயணம் திரைப்படம் தென் இந்திய சினிமாவில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement