தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கென் கருணாஸ், அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்கள் மூலம் அறிமுகமானவர். பின்னர் அசுரன், விடுதலை 2, வாத்தி போன்ற படங்களில் நடித்துத் தனது திறமையை மேலும் நிரூபித்தார்.
இதைத் தொடர்ந்து கென் கருணாஸ் இயக்கியும் நடித்தும் உள்ள படம் தான் யூத். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பார்வதா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கென் கருணாஸின் நடிப்பும் இந்த படத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, கனவுகள் மற்றும் சமூக சவால்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், கடந்த 19ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, திரையரங்குகளில் சிறப்பாக ஓடி வருகிறது.
இந்த நிலையில்,‘யூத்’ திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் சுமார் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கென் கருணாஸின் திரைப்பட பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
Listen News!