• Mar 25 2026

‘சிறகடிக்க ஆசை’ முத்துவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சர்ப்ரைஸ்.! ட்ரெண்டிங் வீடியோ

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வெற்றி வசந்த். இவர் சின்னத்திரையில் “விஜய் சேதுபதி” என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இவரை பட்டி தொட்டி எங்கும் அறிமுகப்படுத்தியது. இந்த சீரியலில் நடிக்க முன்பு சில ஷார்ட் ஃபிலிம்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவருக்கு பெயரும் புகழும் பெற்றுத் தந்தது இந்த சீரியல்தான்.

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமா கம்பெனியில் காவலாளியாகவும் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.


இதைத்தொடர்ந்து, பொன்னி சீரியலில் நடித்த நடிகை வைஷ்ணவியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களின் திருமண வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்த் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement