திரைப்படப் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் தனது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு, இனி இயல்பாக நடப்பதே சந்தேகம் என மருத்துவர்களால் கூறப்பட்ட நிலையிலும், மன உறுதியுடன் மீண்டு வந்து தொடர்ந்து நடனமாடியதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1987ஆம் ஆண்டு திரைப்படமொன்றின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்ட அவர், தனது திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் எதிர்கொண்ட கடினமான அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.
இதன்போது, படப்பிடிப்பின் போது தனது வலது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், காலில் மூட்டு போன்ற அமைப்பே இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதித்த போது, மீண்டும் இயல்பாக நடப்பதே சந்தேகம் எனத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், மருத்துவர்களின் கணிப்புகளையும் தாண்டி மன உறுதியுடன் காயத்திலிருந்து மீண்டு வந்ததாகவும், அதன் பின்னரும் தனது நடனப் பயிற்சியையும் திரைத்துறைப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்த விபத்துக்குப் பின்னரே தனது திரைப்பயணம் வேகமெடுக்கத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையில் எதிர்பாராத சவால்கள் வந்தாலும், அவற்றைத் தைரியத்துடனும் விடாமுயற்சியுடனும் எதிர்கொண்டால் வெற்றிபெற முடியும் என்பதற்கு தனது அனுபவமே சான்று எனும் வகையில் ரம்யா கிருஷ்ணனின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது.
தற்போது அவரது இந்தப் பழைய அனுபவம் தொடர்பான கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றன.
Listen News!