தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பல கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரௌடி தாத்தா என்ற படத்தின் படப் பூஜையில் கலந்து கொண்ட பவர் ஸ்டார், புதிதாக கட்சி தொடங்க உள்ளமை பற்றி பேசியுள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், நடிகர் விஜய்யின் TVK கட்சிக்கு எதிராக அண்ணா வளர்ச்சி கழகம் (AVK ) என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளேன். அரசியலில் எனக்கு போட்டி விஜய் தான். TVK-க்கு எதிராக AVK இருக்கும்.

மேலும், விரைவில் கட்சி தொடக்க விழா நடத்தப்படும் என்றும், இந்த தேர்தலில் இல்லை என்றாலும் அடுத்த தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இப்போ தான் குழந்தைக்கு பெயர் வைப்பது போல கட்சி ஆரம்பித்துள்ளேன் என்றார்.
சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது அதிகரித்து வரும் நிலையில், பவர் ஸ்டாரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!