தமிழ் சினிமாவில் வெளியான காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், ஹே சினாமிகா, சைக்கோ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகை அதிதி ராவ். இவர் பிரபல நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்தார்.
இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான 'சாசு மா' என்ற மியூசிக் வீடியோ ஒரே வாரத்தில் 2.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பெரும் வைரலானது.
மேலும் 40 வயதை கடந்த அதிதி, இந்த வயதிலும் இவ்வளவு நேர்த்தியாக உடலை பராமரிக்கின்றார் என்பது தொடர்பிலும், அவருடைய உணவு முறை, உடற்பயிற்சி பற்றியும் சமீபத்தில் பேட்டி ஒன்று வெளியானது.

அதில் அவர் கூறுகையில், உணவுகளை பொருத்தவரை தென் இந்திய உணவுகள் தான் எனது பேவரிட். இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். முட்டையும் நல்லது என்பதால் அதையும் எடுத்துக் கொள்வேன். காலையிலும் அதிகமாக தென்னிந்திய உணவுகளை உண்பேன். மதியத்தில் பொதுவாக பருப்பு சாதம், காய்கறி போன்றவையே அதிகமாக இருக்கும். இரவில் மீன், சிக்கன் போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வேன். எனக்கு என்ன சாப்பிட தோன்றுகிறதோ அதைத்தான் சாப்பிடுவேன்.

உடற்பயிற்சியை பொறுத்த வரை யோகா, நடனம் மற்றும் மனதில் தோன்றும் உடற்பயிற்சியை மாற்றி மாற்றி செய்வேன். ஒரே மாதிரி செய்தாலும் போர் அடிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளன. அதில் பார்ப்பதற்கு 20 வயது இளம்பண்ணை போல தோற்றமளிக்கும் அதிதி ராவை ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!