• Jan 22 2026

நடிகைக்கு பாலியல் துன்பறுத்தல்... விடுதலையானார் நடிகர் திலீப்.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமாக உள்ள நடிகையை கடத்தி, அவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் உட்பட பலர் கைது செய்யப்பட்ட விவகாரம் நாடளாவில் பேசப்பட்டது. 


இந்த வழக்கு, 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகும். கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்த விசாரணைகளுக்கு பிறகு, இன்று (2025 டிசம்பர் 8) நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த நடிகை, கோலிவுட்டிலும் தமிழ் திரையுலகிலும் பெயர் பெற்றவர். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி, ஒரு திரைப்படப் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஒரு கும்பல் அவரது காரை தடுத்துக்கொண்டு, தகராறு செய்து, அவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தது. 

இது நடந்தது இரண்டு மணி நேரத்திற்கு மேலான பின்னர் அந்த கும்பல், நடிகையை ஒரு இயக்குநரின் வீட்டில் இறக்கி சென்றது.


இந்த சம்பவம் உடனே காவல் துறைக்கு புகாராகச் சென்று, விசாரணை தொடங்கப்பட்டது. பொலிஸார், முதலில் பல்சர் சுனில் மற்றும் அவருடன் தொடர்புள்ள சிலரை கைது செய்தனர். பின்னர், விசாரணையில் நடிகர் திலீப்புக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரிய வந்தது. இதன் பேரில் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கு, ஆரம்பத்திலேயே திரையுலகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றது. காரணம், நடிகை மற்றும் நடிகர் திலீப்பின் புகழ், வழக்கின் தாக்கத்தை அதிகமாக எடுத்துவைத்தது. 

இந்நிலையில், நீதிபதி இன்று தனது தீர்ப்பை வழங்கி, மக்களுக்கு நிம்மதியை வழங்கியுள்ளார். தீர்ப்பில், நடிகை மீது பாலியல் துன்புறுத்தல் வழங்கிய சம்பவத்தில் நடிகர் திலீப் சம்மந்தப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பு, திலீப்பின் ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement