• Sep 10 2024

யோகிபாபு ஹீரோ.. காளி வெங்கட் வில்லன்.. அஜித் பட நடிகை தான் நாயகி.. என்ன ஒரு காம்பினேஷன்?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

யோகி பாபு ஹீரோவாகவும் காளி வெங்கட் வில்லனாகவும் அஜித் படத்தில் நடித்த நடிகை நாயகியாகவும் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் வெளியான ’போட்’ படத்தில் கூட அவர் ஹீரோவாக சிறப்பாக நடித்திருந்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் யோகி பாபு நடிக்கும் ’மலை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த ’வேதாளம்’ உள்பட சில படங்களில் நடித்தவர் என்பதும் இந்த படத்தில் அவர் டாக்டராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் முதல் முறையாக காமெடி வேடங்களில் இதுவரை நடித்த காளி வெங்கட் வில்லனாக நடித்துள்ளதாகவும்,  நிஜமாகவே அவர் வில்லன் கேரக்டரில் மிரட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

சுசீந்திரன், சீனு ராமசாமி போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குனராக இருந்த முருகேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் கொங்கனி மலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

வரும்  செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ள இந்த படம் மக்கள் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement