• Sep 14 2024

சூர்யா - ஜோதிகா ஜோடி தொகுத்து வழங்குகிறார்களா? வேற லெவலில் யோசிக்கும் பிக்பாஸ் டீம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்பது குறித்து விஜய் டிவி தரப்பு ஆலோசித்து வரும் நிலையில் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி, ரம்யா கிருஷ்ணன், சிம்பு உள்பட ஒரு சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் கமல்ஹாசன் அளவுக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் நீண்ட ஆலோசனையில் பிக் பாஸ் டீம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் சில அதிரடி மாற்றம் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் டீம் கருதுவதாகவும், இதனை அடுத்து முதல் முறையாக பிக் பாஸ் வரலாற்றில் ஒரு நட்சத்திர ஜோடியை தொகுத்து வழங்க செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



அந்த வகையில் சூர்யா - ஜோதிகா இருவரும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று வேற லெவலில் யோசித்த பிக் பாஸ் டீம், இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் விரைவில் சூர்யா - ஜோதிகாவிடம்  பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் சேனல் தரப்பிலிருந்து செய்தி கசிந்துள்ளது.

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் இது மட்டும் நடந்தால் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8, பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement