• Jan 19 2025

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் சிட்டிக்கு கிடைத்த விருது! காரணம் யாரு தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் நாளுக்கு நாள் வித்தியாசமான கதைக் களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றதால் இதற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

இந்த சீரியலில் நடிக்கும் அனைவரது நடிப்பும் மிக யதார்த்தமாக காணப்படுகின்றது. இதன் காரணத்தினாலே இந்த சீரியலை பெரும்பாலானோர் கொண்டாடி வருகின்றார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து இருந்தது. அதன் பின்பு ஒரு சில வாரங்களாக அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும் தற்போது மீண்டும் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்துள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியலில் உள்ள கேரக்டர் அத்தனை பேருக்குமே ஒவ்வொரு ஒவ்வொரு கதைக்களம் காணப்படுகின்றது. அத்துடன் யாரையும் நீண்ட நாள் காணவில்லை என்று ரசிகர்கள் ஏங்கும் வகையில் காணப்படாது. இதுவே இந்த சீரியலுக்கு பிளஸ் ஆக காணப்படுகின்றது.


இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் சிட்டி கேரக்டரில் நடித்து வரும் நடிகர்கார்த்திக் பிரபு அவருக்கு அஜந்தா பைன்  ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக சிறந்த நடிகருக்கான விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விருதைப் பெற்றுக் கொண்ட சிட்டி எனக்கு இந்த விருது கிடைக்க முக்கியமான காரணம் நடிகரும் என்னுடைய அன்பு அண்ணாவும் ஆன லொள்ளு சபா பழனியப்பன் தான் எனவும், அவரின் முயற்சியால் தான் தனக்கு இந்த விருதும் பாராட்டும் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement