• Jan 26 2026

பொங்கல் ரிலீஸ் படங்களின் நேற்றைய புக்கிங் நிலவரம்..! ஜீவாவுக்கு அடித்த ஜாக்பாட்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின்  பராசக்தி படமும் ரிலீஸ் ஆக இருந்தன. ஆனால்  சென்சார் போர்டு பிரச்சனையால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. 

இதைத்தொடர்ந்து  பராசக்தி படத்துடன்  ஜீவா நடிப்பில்  வெளியான தலைவர் தம்பி தலைமையில் என்ற படமும், கார்த்தி நடிப்பில் வா வாத்தியார் என்ற படமும் போட்டியிட தயாரானது. 

இந்த நிலையில், பொங்கல் ரிலீஸ் படங்களின் நேற்றைய டிக்கெட் புக்கிங் நிலவரம் திரையுலக வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்படி, தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் எதிர்பார்ப்பை மீறி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு புக்கிங் அதிகரித்து, கிட்டத்தட்ட 1.39 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அளவிலான வரவேற்பை ஜீவாவே எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


பராசக்தி படம் வெளியான ஒரு வாரம் கடந்தும் நிலையான வசூலை பதிவு செய்து வருகிறது. இதுவரை சுமார் 69 ஆயிரம் டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய இடத்தை உறுதி செய்துவிட்டார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் வா வாத்தியார் திரைப்படத்தின் புக்கிங் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் நலன் குமாரசாமியின் முந்தைய படங்கள் ஏற்படுத்திய தாக்கம் இந்த படத்தில் இல்லாததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மொத்தத்தில், பொங்கல் ரிலீசில் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஜாக்பாட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement