• May 10 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை துபாயில் சந்தித்த உடன்பிறவா தங்கை.! யார் தெரியுமா.?

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித் தற்போது திரையுலகத்தை விட ரேஸிங்கில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவர் துபாயில் நடைபெற்ற ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகிறார். 


சமீபகாலமாக, அஜித் தொடர்ந்து படங்களுக்கு நேரத்தை ஒதுக்காமல், தனது ரேஸிங் ஆர்வத்துக்காகவே பல நாடுகளைச் சுற்றி வருவதாக தெரிய வருகிறது. இவர் சமூக வலைத்தளங்களில் பகிரும் படங்களை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.

இந்நிலையில், துபாயில் நடைபெற்ற போட்டியில் அஜித் பங்கேற்று பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மற்றும் ரேஸிங் பிரியர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளார்.

அஜித் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை பல திரை பிரபலங்கள் நேரில் பார்வையிட்டனர். குறிப்பாக, சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் அஜித்தை சந்தித்து, அவருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.


அஜித்தின் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு முக்கிய விஷயம் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதாவது அஜித்துடன் "தீனா" படத்தில் உடன்பிறவா தங்கையாக நடித்த திவ்யா, தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் அஜித்தை நேரில் சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement