• Mar 25 2026

எங்கள வளர விட மாட்டீங்களா.? கென் தனது பாடலை திருடியதாக கானா பாடகர் தினேஷ் ஆவேசம்

Aathira / 20 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் யூத். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் கருணாஸின் மகன் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளதோடு, அந்த படத்தை அவரே இயக்கியது பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்தப் படம் வெளியான ஒரு வாரத்திற்குள் 30 கோடியை வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த படத்தில் அதிகமாக சிம்புவின் ரெஃபரன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 'யூத்' படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை கென் கருணாஸ் திருடி படத்தில் இணைத்துள்ளார் என கானா பாடகர் தினேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது அவரது பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி அவர் கூறுகையில், நான் பாடி வெளியிட்ட ஒரு கானா பாடலை எந்த விதமான அனுமதியும் பெறாமல் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. பாடல் உருவாக்குவது எவ்வளவு கஷ்டம் என்பதை அறியாமல் இப்படிச் செய்வது சரியல்ல.

சுமார் 12 வருடங்களுக்கு முன்பு இந்த பாடலை உருவாக்கினேன். ‘நான் ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிகா’ என்ற பாடல் தான் அது. ஆனால் யூத் படத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் அந்த பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் அதற்கு வேறு ஒரு பாடகரின் பெயர் பதிவிட்டுள்ளனர்.


எங்களை வளர விட மாட்டீர்களா? நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பாடலை உருவாக்குகிறோம். சின்ன வயதிலிருந்தே கடன் வாங்கி கானா பாடல்களை உருவாக்கியுள்ளோம். பல கானா பாடகர்கள் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.

எனக்கு காசோ, பணமோ தேவையில்லை. அதற்கு பதிலாக படத்தில் பயன்படுத்திய பாடலுக்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்க வேண்டும். இல்லையெனில் அந்த படத்தில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும் என கானா பாடகர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement