• May 08 2026

திருட்டு விஷயத்தில் திடீரென கைதான முத்து, மீனா.! யாரும் எதிர்பாராத திருப்பம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து, மீனாவும் தங்களுடைய உண்மையான தோற்றம் தெரியக்கூடாது என்பதற்காக திருடர்கள் போல கெட்டப்பை மாற்றுகின்றனர்.

அந்த நேரத்தில் சீதாவின் அம்மா, மீனாவுக்கு போன் செய்து தாலி செயின் காணாமல் போனதால், சீதாவை அருண் அடித்து விரட்டி விட்டதாக சொல்லுகிறார்.

அதற்குப் பிறகு முத்துவும் மீனாவும் நகைகளை திருடி விற்கும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு சென்று தாங்கள் நகை ஒன்றைக் கொண்டு வந்ததாகவும், அதனை விற்றுத் தர வேண்டும் எனவும் திருடர்கள் போலவே பேசுகின்றனர்.

அந்த நேரத்தில் சீதாவின் தாலி செயினை சிந்தாமணியின் அடியாள் கொண்டு வந்து கொடுத்தது நிரூபணமாகிறது. இதன் போது அங்கு திடீரென போலீஸ் வந்து விடுகிறது. இதனால் முத்து, மீனாவையும் அழைத்துச் செல்கின்றனர்.


போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவர்களை விசாரிக்கும் போது, முத்து, மீனா நடந்ததை சொல்லுகின்றனர். ஆனால் அவர்கள் நம்ப மறுக்கின்றனர். இதனால் அண்ணாமலைக்கு போன் செய்து அவரை நேரில் வருமாறு அழைக்கின்றனர். விஜயா வேண்டாம் என்று மறுக்கிறார்.

ஆனாலும் அண்ணாமலை, “நான் இப்போது செல்லவில்லை என்றால் அவர்களுக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விடுவார்கள்” என்று சொல்லுகிறார். அதற்கு முன்பு ரவியும் ஸ்ருதியும் அங்கு சென்று தங்களுடைய ஆதார் கார்டை காட்டி நடந்தவற்றை விளக்குகின்றனர். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement