பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழ்பவர் அக்சய் குமார். இவர் ஒருசில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். எப்போதுமே பிஸியாக நடித்துவரும் இவர், ஏகப்பட்ட விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது ஃபிட்னஸ் ரகசியத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் அக்சய் குமார். இவர் 50 வயதைக் கடந்த போதும், இளைஞர்களை வெட்கப்படவைக்கும் உடலமைப்பையும் ஆரோக்கியத்தையும் பேணி வருகிறார்.
அதன்படி பேட்டியில் அவர் கூறியதாவது: "எப்போதும் நான் ஒரே விஷயத்தையே சொல்கிறேன். சூரியன் மறையும் முன்பே, குறிப்பாக மாலை 6:30 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுங்கள். இதைவிட பெரிய மந்திரம் வாழ்க்கையில் இல்லை. டாக்டர்களும் இதையே ஒப்புக்கொள்வார்கள்" என்று தெளிவாக தெரிவித்தார்.

உண்மையிலேயே இது ஒரு எளிமையான ஆனால் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையாக பேசப்படுகிறது. இரவு உணவை சீக்கிரம் முடிப்பதால் உடலுக்கு செரிமானத்திற்கு போதுமான நேரம் கிடைக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
அக்சய் குமார் தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருப்பார் என்பதும், உணவு கட்டுப்பாட்டில் மிகவும் கண்டிப்பாக இருப்பார் என்பதும் பலரும் அறிந்த விஷயம். இந்த எளிய பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் யார் வேண்டுமானாலும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்பதே அவரது முக்கிய கோட்பாடாக காணப்படுகிறது.
Listen News!