தமிழ் சினிமாவில் காதல் கதைகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கியுள்ள புதிய படம் ‘With Love’, வெளியான முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க வசூலை பெற்றுள்ளது. நேற்று, அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி, உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இந்த படம், ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்ட அபிஷன் ஜீவிந்த். இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் அவர் திறமையை வெளிப்படுத்தியுள்ள இந்த முயற்சி, சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவருக்கு ஜோடியாக இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இயல்பான நடிப்பு மற்றும் எமோஷனல் காட்சிகளில் அனஸ்வராவின் பங்களிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

‘With Love’ படத்தை எம்.ஆர்.பி என்டர்டெய்மெண்ட் நிறுவனத்தின் மகேஷ் மற்றும் சியோன் ஸ்டூடியோஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரித்துள்ளனர். அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களின் கூட்டணி படத்தின் தரத்தில் வெளிப்படையாக தெரிகிறது.
படத்திற்கு இசையமைத்துள்ளார் ஷான் ரோல்டன். இந்நிலையில், படம் வெளியான முதல் நாளிலேயே வசூல் விஷயத்தில் நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது. திரைப்பட வசூல் விவரங்களை வெளியிடும் சாக் நிக் (Sacnilk) வலைத்தளத்தின் தகவலின்படி, ‘With Love’ படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் சுமார் ரூபாய் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!