பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி இருமிக் கொண்டிருக்கிறதைப் பார்த்த அரசி அம்மாவுக்கு என்னவோ செய்யுது என்று சொல்லிக் கத்துறார். அதைக் கேட்ட உடனே சரவணன் ஓடி வந்து அம்மா என்னாச்சு என்று கேட்கிறார். அதனை அடுத்து அரசி பாண்டியனைப் பார்த்து அம்மா இப்புடி உடம்பு முடியாம இருக்கிறாங்க நீங்க பார்த்திட்டு பேசாம இருக்கிறீங்களே என்று சொல்லிப் பேசுறார்.
அதுக்கு பாண்டியன், உங்க அம்மா நடிக்கிறாள் நானும் சேர்ந்து நடிக்கிறதா என்று கேட்கிறார். அதைக் கேட்ட உடனே அரசி ஷாக் ஆகுறார். பின் பாண்டியன் ரூமில இருந்து வெளியில போய் தூங்கிறார். அதனை அடுத்து கோமதி மொத்த நடிப்பும் வீணாப்போச்சு என்று சொல்லுறார். மறுநாள் காலையில, கதிர் ராஜியை கிளாஸுக்கு நேரம் போய்ட்டு என்று சொல்லி எழுப்புறார்.

பின் கதிர் இன்னும் ஒருநாள் சென்னையில இருந்திட்டு போகலாம் என்கிறார். அதுக்கு ராஜியும் சம்மதிக்கிறார். அதைத் தொடர்ந்து, சரவணன் கோமதியை பார்த்து முதலில அப்பா அமைதியாகட்டும் அதுவரைக்கும் பேசாம இரு என்கிறார். மறுபக்கம் செந்தில் மீனாவுக்கு சமைக்கிறதுக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து நிற்கிறார்.
பின் செந்தில் மீனாவைப் பார்த்து எனக்கு உன் மேல கோபம் எல்லாம் இல்ல வருத்தம் தான் இருக்கு என்கிறார்.மேலும் நான் உன்னோட புருஷன் எனக்குத் தன்னும் உண்மையை சொல்லியிருக்கலாம் என்கிறார் செந்தில். அதைக் கேட்ட மீனா நான் உங்கள நம்பமாட்டேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!