• Mar 26 2025

பிரதீப்புடன் ஜோடி சேரும் இளம் நடிகை...! டிராகனை மிஞ்சிய வெற்றியைப் பெறுவாரா?

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கிய அவர், காமெடி, காதல் மற்றும் கலாட்டா கலந்த 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் நடிகராக மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

இப்படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து, அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியவுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தில் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். சுதா கொங்கரா போன்ற வித்தியாசமான திரைக்கதைகள் இயக்கும் இயக்குநரின் உதவியாளர் என்பதாலேயே, இப்படம் கதை மற்றும் இயக்கத்தில் ஒரு தனித்துவத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தீஸ்வரன் இப்படத்தின் மூலம் தன் இயக்குநர் பயணத்தை தொடங்குவதுடன் புதுமுக இயக்குநர்களை ஊக்குவிப்பதில் முன்னிலை வகிக்கும் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்புதிய திரைப்படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாள சினிமாவில் தனது நடிப்புத் திறமையால் கவனம் பெற்ற மமிதா, தமிழ் ரசிகர்களிடம் மெதுவாக இடம்பிடித்துள்ளார். அந்தவகையில் தற்பொழுது வெளியான தகவல் அனைத்து ரசிகர்களிடையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement