தென்னிந்திய திரையுலகில் சிறந்த கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கின்றார். தெலுங்கு திரைப்படங்களில் இருந்து பிரபலமான ராஷ்மிகா, தற்போது ஹிந்தி மற்றும் தமிழ்ப் படத்துறையிலும் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
சமீபத்தில்,பிரபல ஊடக நிறுவனத்தின் நேர்காணலில் ராஷ்மிகா தன்னுடைய அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். குறிப்பாக, பாலிவூட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுடன் நடித்த அனுபவம் குறித்து, அவர் பகிர்ந்த வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது..
ராஷ்மிகா தனது பேட்டியில், சல்மான்கானுடன் இணைந்து நடித்த 'சிக்கந்தர்’ படம் பற்றிக் கூறியுள்ளார். அத்துடன்,“சில வருடங்களுக்கு முன், நான் ஒரு சினிமா விழாவுக்கு பார்வையாளராக சென்றிருந்தேன். இன்று அந்த மேடையே என்னை கெளரவிக்கின்றது. இது ஒரு கனவு போல இருக்கு” எனவும் தெரிவித்துள்ளார். ராஷ்மிகா மேலும் சல்மான்கானுடன் நடித்தது தனக்குப் பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இத்தகவல் ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!