• Jan 19 2025

’காவாலா’ தமன்னாவை ஓரம் கட்டிவிடுவாரா ராஷிகன்னா? பேய் பட கிளாமரில் போட்டோ போட்டி..!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, வினய் ராய், ராய் லட்சுமி ஆகிய பல சினிமா பிரபலங்களின் அட்டகாசமான நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் அரண்மனை.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து எடுக்கப்பட்ட சீக்குவல்ஸ் ஆன அரண்மனை பாகம் இரண்டு, பாகம் மூன்று ஆகிய  திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் இடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இதற்கான நான்காம் பாகமானது படப்பிடிப்பில் உள்ளது. தமிழ் சினிமாவில் பாகம் 3 ஐ கடந்த முதல் சினிமாவும் அரண்மையே ஆகும்.


இத்திரைப்படத்தில், வரவிருக்கும்  நான்காம் பாகத்தில் சந்தோஷ், தமன்னா, ராஷி கன்னா,சந்தானம்,ஜோகி பாபு ,மொட்டை ராஜேந்திரன்,கோவை சரளா போன்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

சமீப காலங்களில் சந்தானம் நடித்தால் ஹீரோவாக மாத்திரமே நடிப்பேன் என்று கூறி வந்த நிலையில், இத்திரைப்படத்தில் சந்தானம் ஹீரோவா? இல்லை ஜோக்கரா?  என்ற கேள்விகளும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது அரண்மனை பாகம் நான்கின் ஸ்டில்ஸ் ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் தமன்னா மட்டும் ராசி கன்னா இருவரும் கவர்ச்சி உடையுடன் உள்ள புகைப்படம் ஒன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement