• Jan 19 2025

உள்நாட்டு டான்ஸ் போரடிச்சுருச்சு.. இனி பிரிட்டிஷ் டான்ஸ் தான்.. ஷாருக்கான்!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர்  திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 

மேலும் 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். 

இதை தொடர்ந்து தமிழிலும் ஜவான் என்ற படத்தில் நடித்து இருந்தார். அது சூப்பர் ஹிட்டாகி 1000 கோடி வரை வசூலித்தது.


இந்த நிலையில், 'ஷேப் ஆஃப் யூ' என்ற பாடலை பாடிய பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் நடனமாடும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், அவர்கள் இருவரும் சிக்னேச்சர் போஸை ஒன்றாக செய்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


ஏற்கனவே, பாடகர் எட் ஷீரன் செவ்வாயன்று பிரபல பின்னணிப் பாடகர் அர்மான் மாலிக்கைச் சந்தித்த நிலையில், பிரபல நடிகர் ஷாருக்கானையும் சந்தித்துள்ளார்.

தற்போது, அவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு வெளியான 'ஆலா வைகுந்தபுரமுலூ'  திரைப்படத்தில், அர்மான் மாலிக் பாடிய சூப்பர்ஹிட் பாடலான 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடி உள்ளனர்.

இதேவேளை, எட் ஷீரன் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி, மும்பையில் இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement