• Jan 19 2025

100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இணையும் ஷைத்தான்? தியேட்டரை அலறவிட்ட மாதவன்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களான மாதவன் மற்றும் ஜோதிகா இருவரும் மீண்டும் இணைந்த திரைப்படம் தான் ஷைத்தான். ஏற்கனவே பாலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்த ஜோதிகா, தற்போது ரீ என்ட்ரியிலும் பட்டைய கிளப்பி வருகிறார்.

அண்மையில் வெளியான ஷைத்தான் படத்தில் அஜய் தேவ்கன், மாதவன், மற்றும் ஜோதிகா நடித்திருந்த நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் வேட்டையாடி வருகிறது.

ஒரு இளம் பெண்ணை தனது இஷ்டத்துக்கு ஏற்ப மந்திரத்தால் ஆட்டிப்படைக்கும் வில்லனாக மாதவன் இந்த படத்தில் மிரட்டி இருக்கிறார். இப்படி ஒரு கொடூரமான நடிப்பை யாரும் கண்டிருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவில் அவரது நடிப்பு இருந்தது.


இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே 15 கோடி வசூலை செய்திருந்தது. அதை அடுத்து விடுமுறை நாட்களில் 19.8 கோடியும், அடுத்த நாள் 20.65 கோடியும் வசூலித்து இருந்தது. ஆக மொத்தம் மூன்று நாட்களிலேயே 55 கோடிக்கு வரை வசூலித்து இருந்தது.


இந்த நிலையில், ஷைத்தான் படத்தின் தற்போது வரையிலான மொத்த வசூல் 74.12 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இதன் அடிப்படையில் இன்றைய தினம் 5- 6 கோடி வரை வசூலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டும் இன்றி இரண்டாவது வார இறுதியில் ஷைத்தான் படத்தின் வசூல் 100 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement