• Mar 18 2025

பிரபுதேவா இயக்கத்தில் அறிமுகமாகும் புதிய ஹீரோ...! திரையரங்கில் ஹிட் கொடுப்பாரா?

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் 1993ம் ஆண்டு ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து காதலன் , இந்தியன், எந்திரன் போன்ற ஹிட்டான படங்களை திரையுலகிற்கு கொடுத்திருந்தார்.

தற்பொழுது ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ‘விருமன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி கார்த்தியுடன் நடித்த அந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து அதிதி, தனது இரண்டாவது படத்தினை சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார். 


இப்போது, ஷங்கர் குடும்பத்திலிருந்து இன்னும் ஒரு சினிமா ஹீரோ வரவிருக்கிறார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அது வேறு யாருமல்ல, ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர். தற்போது, அவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் துணை இயக்குநராக பணியாற்றி வருகின்றார். இதற்கிடையே, அவர் நடிகராக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே, சினிமா இயக்குநராக பயிற்சி பெற்றுவந்த அர்ஜித், தற்போது ஹீரோவாக மாறவிருப்பதுடன் இவரை இயக்குநராக பிரபுதேவா நியமித்தமையும் குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா இதற்கு முன்பு வில்லு , தேவி போன்ற சில படங்களை இயக்கியவர். தற்போது அவர் இயக்கும் புதிய படத்தில் தான் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக தனது ஹீரோயின் பயணத்தை தொடங்கியுள்ளார். இதனை அடுத்து , அர்ஜித் ஷங்கரும் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கத் தயாராகி வருவதால், சினிமா வட்டாரங்களில் பரவலாகப் பல கருத்துக்கள் எழுந்துள்ளன. 

Advertisement

Advertisement