• Mar 18 2025

பிரபல நடிகர் மீது தவறான கருத்துக்களைப் பரப்பும் முன்னாள் மனைவிகள்....! – யார் தெரியுமா?

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான பாலா, சமீபத்தில் தனது முன்னாள் மனைவிகள் மீது கொச்சிக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா தனது தற்போதைய மனைவி கோகிலா உடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

அவரது புகாரின் படி, இரண்டாவது மனைவியான பாடகி அம்ருதா சுரேஷும், மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத்தும் சமூக ஊடகங்களில் தனது பெயர் குறித்து தவறான தகவல்கள் பரப்புவதோடு அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.


நடிகர் பாலா தனது புகாரில், முன்னாள் மனைவிகள் இருவரும் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி தனக்கு எதிராக நடக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் இந்த செயலால் தன் குடும்பத்திற்கும், தனக்கும் பெரும் மனஅழுத்தம் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் பாலா, "அஜு அலெக்ஸ் என்ற யூடியூபர், தொடர்ந்து என்னை குறித்தும் என்னைச் சேர்ந்த சம்பவங்கள் பற்றியும் தரக்குறைவான வீடியோக்கள் வெளியிட்டு லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனது பெயரைப் பயன்படுத்தி பல்வேறு தவறான தகவல்களைப் பரப்புவதோடு இதை ஒரு பணமாக்கும் வியாபாரமாக மாற்றியுள்ளார்" என்றும் கூறியுள்ளார்.


கொச்சி காவல்துறையின் தகவலின்படி, நடிகர் பாலா அளித்த புகாரை அவர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். முன்னாள் மனைவிகள் மற்றும் யூடியூபர் அஜு அலெக்ஸ் மீதான குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தற்போது மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பாலாவின் புகார், சமூக ஊடகங்களில் முன்னாள் மனைவிகள் மற்றும் யூடியூபர் மீதான சர்ச்சையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement