இந்திய சினிமாவில் மாபெரும் ஹிட்டடித்த திரைப்படங்களின் பட்டியலில் தனி இடத்தை பிடித்திருக்கும் படம் தான் கேஜிஎப் திரைப்படம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டடித்தது.
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடித்த “கேஜிஎப் சாப்டர் 1” மற்றும் “கேஜிஎப் சாப்டர் 2” திரைப்படங்கள் இந்தியாவைத் தாண்டி உலகளவில் வசூல் சாதனை படைத்தன. ராக்கி பாய் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு, “கேஜிஎப் சாப்டர் 3” எப்போது உருவாகும் என்ற கேள்வி ரசிகர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் பேசிய பிரஷாந்த் நீல், தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் “டிராகன்” படத்தில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அதன்பின் சலார் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், “நானும் யாஷும் தற்போது பல படங்களில் பிஸியாக உள்ளோம். அதனால் கேஜிஎப்-3 குறித்து யோசிக்கவே இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்” என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும், “ராக்கி பாய் மீண்டும் வருவார்” என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் குறையவில்லை. இதனால் இந்த படத்தின் மூன்றாம் பாகம் எத்தனை வருடங்கள் கழித்து வெளியானாலும் அதே எதிர்பார்ப்புடன் காத்திருக்க தயாராகியுள்ளனர்.
Listen News!