• Jul 26 2026

இதுவரை இல்லாத க்ளாமர் லுக்கில் போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்!மாற்றத்திற்கு இதுதான் காரணமா?

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'லவ் சோனியா' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மிருணாள் தாகூர். முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்த அவர், பின்னர் தெலுங்கு சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார். 


குறிப்பாக 'சீதா ராமம்', 'ஹாய் நன்னா' போன்ற படங்கள் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றார். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்யும் நடிகையாக மிருணாள் தற்போது திரையுலகில் தனித்த அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையை சுற்றி பல்வேறு கிசுகிசுக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. ஆனால் எந்த சர்ச்சைக்கும் பெரிதாக பதிலளிக்காமல், தனது வேலையிலும் ஸ்டைலிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் மிருணாள். அதனால் ரசிகர்கள் மத்தியில் அவரது மதிப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

தற்போது மிருணாள் தாகூர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மாடர்ன் மற்றும் கிளாசிக் ஸ்டைல் கலந்த அந்த லுக்கில் அவர் மிகவும் கவர்ச்சியாகவும் எலிகென்டாகவும் தோன்றுகிறார். 

குறிப்பாக அவரது ஸ்மைல், ஸ்டைலிஷ் போஸ்கள் மற்றும் க்ளாமரஸ் அவதாரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement