• Oct 30 2024

யார் இந்த பாடகி வாணி ஜெயராம்- இதுவரை தெரிந்திடாத உண்மைத் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அண்மையில் யாரும் எதிர்பாராத விதமாக இறப்புக்குள்ளானவர் தான் வாணி ஜெயராம். வீட்டில் தனிமையில் வசித்து வந்த இவர் திடீரென இரத்தக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அத்தோடு இது கொலையா அல்லது சாதாரண மரணம் தானா என தற்பொழுது வரை போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


எனவே அவர் குறித்து தான் தற்பொழுது பார்ப்போம் வாங்க. அதாவது வாணி ஜெயராம் என்ற அழைக்கப்படும் இவரது இயற்பெயர் ஜெயராம்.1945ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி துரைசாமி மற்றும் பத்மாவதி தம்பதியினருக்கு ஐந்தாவது மகளாகப் பிறந்தார். இசைப் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்ததால் இசை மீது இவருக்கு அதிகமான ஈடுபாடும் இருந்ததாம்.

மேலும் இதனால் தான் ரி. ஆர் பாலசுப்ரமணியம் ஆர் எஸ் மணி ஆகியோர் கிட்டை முறையான பயிற்சினையும் பெற்று வந்தார். தொடர்ந்து சிலோன் வானொலியில் ஒளிபரப்பாகும் ஹிந்தி பாடல்களால் ஈர்க்கப்பட்ட இவர் தானும் சினிமாவில் பாட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வந்தாராம். இதனால் 8 வயது முதலே ஆல் இந்தியா ரேடியோவில் முதலில் தன்னுடைய குரலைப் பதிவு செய்தார்.பின்னர் சென்னையில் தேனது பட்டப்பிடிப்பை நிறைவு செய்தார்.


பின்னர் 1969ல் ஜெயராம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் இவருக்கு இசை மீது இருந்த காரணத்தினால் கணவரும் இவருடைய கனவை நிறைவேற்ற உதவி செய்தாராம். தொடர்ந்து தனது விடா முயற்சியினால் 1971ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான குட்டி என்னும் படத்தில் முதல் முதலாகப் பாடினாராம்.

இப்பாடலில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ,மராத்தி ஆகிய மொழிகளில் பல பாடல்களைப் பாடி இருக்கின்றாராம்.தமிழில் 1974 ம் ஆண்டு வெளியான தீர்க்கசுமங்கலி என்னும் படத்தில் பாடல்களைப் பாடியதன் மூலம் தான் அறிமுகமாகினாராம்.


தொடர்ந்து ஏழு ஸ்வரங்களுக்குள் ,பொங்கும் கடலோசை, முள்ளும் மலரும் போன்ற பல படங்களில் பாடி இருக்கின்றார்.தொடர்ந்து பல கச்சேரிகளிலும் பாடி இருக்கும் இவர் கிட்டத்தட்ட 10000 பாடல்களைப் பாடி இருக்கின்றாராம்.இதற்காக பல விருதுகளையும் பெற்றிருக்கின்றாராம்.

சிறந்த பின்னணி பாடகிக்கான உயரிய விருதாக தேசிய விருதினையும் பெற்றிருந்தாராம். இவர் தன்னுடைய கணவர் இறந்ததைத் தொடர்ந்து தனியாகத் தான் வாழ்ந்து வருகின்றாராம். இப்படியான ஒரு நிலையில் தான் இவருடைய இறப்பு எதிர்பாராத விதமாக நடந்துள்ளது. இவரது இறப்பு ரசிகர்களுக்கு சோகத்தைக் கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement