• Apr 20 2024

விஜய்க்கு அண்ணனாக நடித்த ஷாமின் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்ததா..யாரும் அறிந்திடாத தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஷாக்லேட் போயாக கலக்கி வந்த  நடிகர் ஷாம்.இவரின் இயற்பெயர் ஷம்சுத்தீன் இப்ராகிம்.இவர் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி 1978 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.இவர் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் பிறந்துள்ளார்.இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்.இவருக்கு இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் உள்ளார்கள்.இவர் படிச்சது வளர்ந்தது எல்லமே பாங்களுர் ஆம்.இவர் பி.கொம் டிகிறியை முடிச்சு இருக்காரு.

இவர் ஆரம்பத்தில் மாடலிங் பண்ணிட்டு இருந்துள்ளார்.ஆனால் இவருக்கு சினிமாவிற்குள் நுழைய வேண்டும் என்றது பெரிய கனவாகவே இருந்தது.ஒருநாள் தன்னோட காண்ட்ராக்டர் வழியா இயக்குநர் ஜீவாவை மீட் பண்ண சான்ஸ் கிடைச்சிருக்கு. தன்னோட புரொஃபைலை அவர்கிட்ட கொடுத்துட்டு, ஐ எம் ஷ்யாம்னு இங்கிலீஷ்ல பீட்டர் விட்டு தன்னை இண்ட்ரோ பண்ணிருக்காரு. உடனே, ஜீவா, இப்போ நீ என்ன சொன்னியோ, அதை அப்படியே தமிழ்ல சொல்லுனு தக் லைஃப் கொடுக்க, நீ தான்டா 12 பி படத்துக்கு ஹீரோனு சொல்லி அவரை இன்ட்ரோ பண்ணியிருக்காரு. ஜோதிகா, சிம்ரன்னு டாப்ல இருந்த் ஹீரோயின்கள் அந்தப் படத்துல இவர்கூட நடிக்கிறாங்க. அத்தோடு இன்னொரு ஸ்பெஷல் விஷயம் என்னனா, மிர்ச்சி சிவாலாம் இவர் ஃப்ரெண்டா வருவாரு. காமெடி, சென்டிமெண்ட்னு எல்லாத்துலயுமே செம பெர்ஃபார்ம் பண்ணிருப்பாரு. அந்தப் படம் ரிலீஸ் ஆனப்போ 14 ஷோக்களை தொடர்ந்து தியேட்டருக்குப் போய் மனுஷன் பார்த்தாராம்.அத்தோடு  மக்கள் நம்மள ஹீரோவா ஏத்துக்கிட்டாங்களா, ரெஸ்பான்ஸ் எப்படிலாம் வருதுனு பதட்டத்தோடயே போய்ருக்காரு. கடைசில், ரைட்டு மக்கள் நம்மள ஏத்துக்கிட்டாங்கன்ற நம்பிக்கை அவருக்கு வந்து இருந்து உள்ளது. உண்மையிலயே 12 பி மாதிரி ஒருபடம்லாம் கிடைக்க லக் வேணும்.


குஷி படத்துக்கு முன்னாலயே இந்தப் படத்தோட ஷூட்டிங்க் முடிஞ்சிருச்சாம். ஆனால், புரொடக்‌ஷன் பிரச்னைகளால படம் லேட் ஆகியிருக்கு. அதுக்கு முன்னாடி கேமியோ ரோல்ல அவர் நடிச்ச குஷி படம் ரிலீஸ் ஆகியிருக்கு.அத்தோடு 1999-ல காதலட் தினம் படத்துல இரண்டு ஹீரோக்களில ஒரு ஹீரோவா இவர் நடிக்க வேண்டியது, ஆனால், சில பல பிரச்னைகளால நடிக்க முடியாமல் போச்சாம். அதுக்கப்புறம், பிரியதர்ஷன் இயக்கத்துல லேசா லேசா படத்துல நடிச்சாரு. அதுல ஜோடியா திரிஷா. கிட்டத்தட்ட 12பி பார்த்த அதே ஃபீல் தான் லேசா லேசா பார்க்கும்போதும் வரும். வால்தனம், காதல், சென்டிமென்ட், எமோஷன்னு எல்லாத்துலயும் செமயா பண்ணியிருப்பாரு. 


ஷ்யாம் கரியர்லயே முக்கியமான படம், இயற்கைதான். இன்னைக்கு வரைக்கும் அந்தப் படத்தை கொண்டாடிட்டுதான் உள்ளாங்க. நிறைய பேரோட ஃபேவரைட் கேரக்டர் மருதுதான். காதல் ஏக்கத்தை, குறிப்பா 90’ஸ் கிட்ஸோட காதல் ஏக்கத்தை அப்படியே திரைல மனுஷன் காட்டிட்டு போய்ட்டாரு. அவர் பேசுற ஒவ்வொரு டயலாக்கும் அந்தப் படம் பார்த்து முடிச்சப் பிறகு மனப்பாடமா இருக்கும். “உன்னை காதலிக்கிறதை மனசுக்குள்ள வைச்சுட்டு இருக்க மாட்டேன். உனக்கு என்னை புடிக்கிறதும் புடிக்காததும் உன் இஷ்டம்”னு சொல்றதுலாம் செமயா இருக்கும். கட் பண்ணா, உள்ளம் கேட்குமே. 12 பி, லேசா லேசா வரிசைல இந்தப் படத்தை வைக்கலாம். நடிப்பு, பெர்ஃபாமென்ஸா பார்த்தா 6 மெழுகுவர்த்திகள், அப்படியொரு பெர்ஃபாமென்ஸ் கொடுத்துருப்பாரு.


அத்தோடு விஜய், அஜித் படங்களையெல்லாம் தாண்டி ஷ்யாம் படத்துல வந்த பாடல்களுக்கே தனி ஃபேன் பேஸ் இருக்குனு கூறலாம். எல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் பண்ண வேலைதான். 12 பில ஒரு புன்னகைப் பூவே பாட்டு வரும். லவ் பண்ணு லவ் பண்ணுனு கெஞ்சுற பாட்டுதான் இது. பூவே வாய் பேசும் போதுனு மெலடி ஒண்ணு இருக்கு. சிம்ரன் – ஷ்யாம் டூயட். அல்டிமேட்டா இருக்கும். இவருடைய பாட்டுகளில் , ஒரு பார்வை பார்தான். ஜெம கூலான காதல் பாட்டு. லேசா லேசால, ஏதோ ஒன்று பாட்டு ஏதோ ஒன்று பாட்டு, அவள் உலக அழகியே பாட்டு எல்லாமே தரமா இருக்கும். எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுற மாதிரி அவர் கரியர்ல அமைஞ்ச பாட்டு இயற்கைல வந்த, காதல் வந்தால் சொல்லியனுப்பு. காதல் தோல்வி அசைஞ்சவங்களுக்கான கீதமே இந்தப் பாட்டுதான். உள்ளம் கேட்குமேல ஓ மனமே பாட்டு. மேலும் அப்படியே கட்டி புடிச்சு ஆறுதல் சொல்ற மாதிரி இருக்கும். இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லைன்ற வரிகள்லாம் அப்படி ஜிவ்னு இருக்கும். மேலும் இப்படி ஷ்யாம் கரியர்ல அவருக்கு பாடல்கள் எல்லாம் செம மாஸா அமைஞ்சிருந்தது.  

ஷாம் அறிமுகமான அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு தனுஷ், சிம்பு, விஷால் தொடங்கி ஆர்யா, ஜெயம் ரவி என ஹீரோக்கள் வரிசையாக அறிமுகம் ஆனாங்க. நல்ல கதைகளை, இயக்குநர்களைத் தேர்வு செய்யலாம் என்று ஷாம் நினைத்தபோதும், இயக்குநர்கள் புது ஹீரோக்களை வைத்து படங்களை எடுக்கத் தொடங்கியிருந்தார்கள் அல்லது அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வைத்திருந்தனர். மேலும் இந்த ஒரு சூழல் அவருக்கான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றே கூறலாம். எனினும் அதேபோல், வழக்கமான சாக்லேட் பாய், ரொமான்ஸ் ஹீரோ என்கிற கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து ஆக்‌ஷன் ஜானரில் அவர் நடித்து வெளியான பாலா படம் கைகொடுக்காத சூழலில் மீண்டும் ரொமான்ஸ் ஹீரோ பாணியையே கையிலெடுத்தார். கே.பாலச்சந்தர், தனது பார்த்தாலே பரவசம் படத்துக்குப் பின்னர் ஷாமை வைத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்திருந்தார். ஆனால், அதுவும் அவருக்கு பெருசா வெற்றியைக் கொடுக்கலை. இப்படியான சூழ்நிலைகள் ஷாமுக்கு எதிராகவே அமைந்தன என்று கூறலாம். இதுபோக இன்னும் ரெண்டு முக்கியமான காரணங்களும் இருக்கு!


இயக்குநர் ஜீவாவைத் தன்னுடைய காட் ஃபாதர் என்றே கருதுபவர் ஷாம். 12பியில் ஷாமை ஹீரோவாக்கி அழகுபார்த்தவர், உள்ளம் கேட்குமே மூலம் அவருக்கு முதல் கமர்ஷியல் ஹிட்டையும் கொடுத்தவர். ரஷ்யாவில் தாம் தூம் ஷூட்டிங்கில் இருந்த சமயம், ஷாமுக்காக ஒரு ஆக்‌ஷன் கதையை ஜீவா தயார் செய்து வைத்திருந்தாராம். அந்தப் படத்தைத் தன்னுடைய மேங்கோ ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கும் திட்டத்திலும் அவர் இருந்தாராம். எனினும் இதற்காக எந்தவொரு கமிட்மெண்டும் கொடுத்துடாத என ஷாமிடமும் அறிவுறுத்தியிருந்தாராம் ஜீவா. ஆனால், துரதிருஷ்டவசமாக ஜீவா மறைந்தது ஷாமின் கரியரில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இயற்கை என்கிற தன்னுடைய முதல் படம் மூலம் ஷாமின் கரியருக்கு வேறொரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். ஒரு கட்டத்தில் தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஷாமுக்கு புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் நேர்மையான போலீஸ் வேடம் கொடுத்தவர் ஜனநாதன்.அத்தோடு  லாபம் ஷூட்டிங் சமயத்தில் இயற்கை படத்தின் இரண்டாம் பாகத்தை இப்படி எடுக்கலாம் என்று ஸ்கிரிப்ட் லைனையும் ஷாமிடம் கூறியிருந்தாராம். ஆனால், எதிர்பாராத விதமாக ஜனநாதன் மறைந்தது ஷாமுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

இடையில் தனது தயாரிப்பில் 6 மெழுகுவர்த்திகள் படத்துக்காக ஷாம் போட்ட உழைப்பு விமர்சனரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.அத்தோடு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேல் தூங்காதது மற்றும் உடல் எடையை வழக்கத்துக்கும் மாறாகக் குறைத்தது என அவர் போட்ட உழப்பை இயக்குநர் பாலா உள்ளிட்ட பலர் பாராட்டினர். ஆனால், அதெல்லாம் கமர்ஷியலா ஒரு சக்ஸஸ்ஃபுல் ஹீரோ என்கிற அந்தஸ்தை ஷாமுக்குக் கொடுத்ததா என்றால் இல்லை என்பதுதான் நிதர்சனம்.


இவர்  2023-ல ஒரு கம்பேக் கொடுப்பேன்னு நம்பிக்கையா சொல்லியிருக்கார் ஷாம்.ஷாமுக்குப் பிறகுக் களத்துக்கு வந்த பல ஹீரோக்கள் இன்னைக்கு முன்னணி ஹீரோக்களா இருக்காங்க. ஆனா, 20 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருக்கும் ஷாமால் அந்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை.நடிகர் ஷாம், காஷிஷ் எனும் பெ ண்ணை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவ்வாறுஇருக்கையில் நடிகர் ஷாம் கடந்த 11ஆம் தேதி வெளியான வாரிசு திபை்படத்தில் வஜய்க்கு அண்ணனாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement