• Sep 19 2024

விக்ரம் படத்தில் இளமை பருவத்தில் வரும் கமலுக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை- அட இவரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கின்றார். அத்தோடு ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இந்த திரைப்படம் உருவாகியும் உள்ளது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை இரண்டும் வருகிற மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.

இந்நிலையில், விக்ரம் படத்தில் இளமை பருவத்தில் வரும் கமலுக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ஷன்வி என்பவர் ஜோடியாக நடித்துள்ளாராம். ஷன்வி, கன்னடத்தில் வெளிவந்த அவனே ஸ்ரீமன் நாராயணன், மப்ஃடி ஆகிய பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement