• Jan 19 2025

ஜானி மாஸ்டரின் சாயம் வெளுத்தது.. போக்சோ வழக்கில் துரத்திப் பிடித்த பொலிஸார்?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தை தொடர்ந்து பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. அத்துடன் சினிமா துறையில் பாதிக்கப்பட்ட நடிகைகளும் தமது குற்றச்சாட்டை தைரியமாக முன்வைத்து வருவதோடு பல பிரபலங்கள் மீதும் புகார் அளித்து வருகின்றார்கள்.

அந்த வகையில் புட்ட பொம்மா , மேகம் கருக்காதா , காவாலா , அரேபிக் குத்து உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பாடல்களில் நடனக்கலைஞராக பணியாற்றிய ஜானி மாஸ்டர் மீது அவருடன் பணியாற்றிய பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கடந்து சில மாதங்களாகவே ஜானி மாஸ்டர் உடன் நடன இயக்குனராக பணியாற்றி வருவதாகவும், பணியாற்றிய காலத்தில் படப்பிடிப்பு தளத்தில் வைத்து என்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஹைதராபாத் காவல் நிலையம் ஒன்றில் புகார் அளித்துள்ளார். இந்த விடயம் திரை உலகில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் தனக்கு இப்போது 21 வயது தான் என்றும், தான் மைனராக இருந்தபோதே அவர் என்னை வன்கொடுமை செய்ததாகவும் குறித்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே திருமணமான ஜானி மாஸ்டர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, மதமாற்றம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஜானி மாஸ்டர் மீது ஹைதராபாத் போலீசார் போக்ஸோ மற்றும் மூன்று வழக்குகளை  பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் ஹைதராபாத் பொலிஸாரால் ஜானி மாஸ்டர் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement