• Apr 15 2026

கங்குவா ரிலீஸ் எப்போ தெரியுமா? சுடச் சுட வெளியான மாஸ் அப்டேட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காணப்படும் இந்த திரைப்படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

கங்குவா திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தேதியில்  சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆவதால் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போடப்பட்டது.

அதேவேளை கங்குவா படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமா வட்டாரத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

மேலும் கங்குவா படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாக்கு ஏற்பட்ட காயத்தால்   படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனாது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.


இந்த நிலையில், கங்குவா திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகுமென நாளை காலை பதினோரு மணி அளவில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த படம்  தீபாவளி தினத்தன்று வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இதன் காரணத்தினால் சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement