• Oct 08 2024

எந்தவித போட்டியுமின்றி சிங்கிளாக ரிலீஸாகும் கங்குவா..! புதுசா குறிவைச்ச தேதி இதோ..

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா வித்தியாசமான கேரக்டரில் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கை தேர்ந்தவராக காணப்படுகின்றார்.

நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆனது. அந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அதன் பின்பு எந்த ஒரு படமும் சூர்யா நடிப்பில் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அவர் கங்குவா  படத்தில் இரண்டு ஆண்டுகளாக நடித்து வருவது தான். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

வரலாற்று கதை அம்சம் கொண்ட பிரம்மாண்ட படமாக கங்குவா  உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதாணி நடித்துள்ளார். மேலும் வில்லனாக நடிகர் பாபி தியாலும் மிரட்டி உள்ளார்.

இந்த திரைப்படத்தில் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி கேமியா ரோலில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உட்பட பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


இந்த நிலையில் தங்குவா  திரைப்படம் எப்போது வெளியாகும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு தற்போது வெளிவந்து உள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் காணப்படுகின்றார்கள்.

அதன்படி கங்குவா  திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாகவே பட குழுவினர் அறிவித்துள்ளார்கள். இந்த படம் வசூலில் ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement