• Oct 08 2024

Mani தானா வெளியேறல, சேனல் தரப்பு தான் வெளியேற்றியது! உண்மையை அடித்துக் கூறிய ஷகீலா

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் பங்கு பற்றிய போட்டியாளர்களுள் முதலாவது இடத்தை பிரியங்கா பெற்று வின்னரானார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கு பற்றி வந்த மணிமேகலை தனது வேலைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் தன்மானத்தை இழந்து நான் இனி பணி புரியப் போவதில்லை என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதை தொடர்ந்து மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணமே பிரியங்கா தான் என அவருக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அதேபோல அவருக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், பிரபல நடிகை ஷகீலா இந்த நிகழ்ச்சி இருந்து மணிமேகலையாக வெளியேறவில்லை. சேனல் தரப்பில்  இருந்து தான் அவரை வெளியேற்றி உள்ளதாக பிரியங்காவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். தற்பொழுது அவருடைய பேட்டி வைரலாகி வருகின்றது.


அதன்படி அவர் கூறுகையில், பிரியங்கா ஆங்கரிங் செய்வதில்  உச்சம் தொட்ட நிலையில் அவர் மீது உள்ள பொறாமையில்தான் இத்தகைய விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது. பிரியங்கா பெண் என்றும் பார்க்காமல் அவரது பர்சனல் விஷயங்கள் தொடர்பில் பலரும் விமர்சித்து வருகின்றார்கள். 

நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவள் என்ற அடிப்படையில் பிரியங்கா மற்றும் மணிமேகலை பற்றியும் இரண்டு பேரின் மனநிலையும் பற்றியும் தெரியும். மணிமேகலை மிகப்பெரிய ஆங்கராக மாற வேண்டும் என்ற நோக்கில் தான் பிரியங்கா மீது உள்ள பயத்தில் இப்படி செயல்பட்டுள்ளார்.


மேலும் இந்த நிகழ்ச்சிக்கு கண்டென்ட் தேவை என்பதால் சிறப்பாக பேசும் பிரியங்காவின் பேச்சுக்கள் இறுதியில் எடிட்டிங் செய்யப்பட்டதாகவும் இதனால் கடுப்பான மணிமேகலை ஒரு கட்டத்தில் பிரியங்காவை பேச வேண்டாம் என்று தடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை தானாக விலகவில்லை. இந்த நிகழ்ச்சியை தொடர ஒத்துழைக்காத பட்சத்தில் நீங்கள் வெளியேறலாம் என்று சேனல் தரப்பில் கூறப்பட்டதை தொடர்ந்தே அவர் வெளியேறும் முடிவை  எடுத்ததாகவும், சுயமரியாதை இருந்தால் பிரச்சனையின்  ஆரம்பத்திலேயே மணிமேகலை வெளியேறி இருக்கலாமே என்று ஷகீலா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சுயமரியாதைக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. கோமாளிகள் ஒருவேளை தவறாக பேசினாலும் உடனே அதை கட் செய்து விடுவார்கள். மணிமேகலை என்னுடைய மகள் போன்றவர் தான். ஆனாலும் தான் நியாயத்தின் பக்கமே பேசுவதாக பிரியங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ஷகீலா.

இதேவேளை, மலையாள சினிமாவில் வெளியான ஹேமா கமிட்டி   அறிக்கையால்  தமிழ் சினிமாவிலும் தற்போது பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றை மூடி மறைப்பதற்காகவே இந்த பிரச்சனை சமூக வலைத்தள பக்கங்களில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement