• Jan 19 2025

மூக்குத்தி அம்மன் படத்தில் தில்லாலங்கடி வேலை பார்த்த பாலாஜி..! அம்பலமான உண்மை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் 40 வயதை கடந்த போதும் இன்று வரையில் ஹீரோயின் ஆகவே நடித்து வருகின்றார். அதேபோல தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா காணப்படுகின்றார்.

2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தை இயக்கிய ஆர். ஜே பாலாஜி இதில் நடித்தும் இருந்தார்.

தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அதிகார்வ பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. மேலும் ஆர்.ஜே பாலாஜி த்ரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்க உள்ளார்.


இந்த நிலையில், ஆர்.ஜே பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மூக்குத்தி அம்மன் படத்தின் கதை பற்றி சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது மூக்குத்தி அம்மன் படம் காவியம் எல்லாம் இல்லை. ஹிந்தில எடுத்த PK படத்த தான் கொஞ்சம் லைட்டா மாத்தி எடுத்திருப்போம். ரிப்போர்ட்டர் பொண்ணுக்கு பதிலாக பையன்.. எனக்கு கூட பிறந்தவங்க ஐந்து பேர்.. அதில் ஒரு தம்பியை மட்டும் கட் பண்ணி, ஒரு பையன் மூணு பொண்ணா  வச்சாதான் பாக்கப் பாவமா இருக்கிற மாதிரி வைத்திருப்போம் என்று இந்த படத்தின் கதை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதாவது மூக்குத்தி அம்மன் படம் அமீர்கான் நடித்த PK படத்தை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டுள்ளதாம். தற்போது இந்த தகவலை ஆர்.ஜே பாலாஜியே தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement