• Jan 19 2025

'மகாராஜா' நடிகை, பிரபல காமெடி நடிகர்..? பிக் பாஸ் சீசன் 8ன் அடுத்த லிஸ்ட் இதுதானா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆரம்பமாக உள்ளதாம். பிக் பாஸ் ஆரம்பமாக உள்ள தேதியை புதிய ப்ரோமோவுடன் உடன் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகநாயகன் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக களம் இறங்கி உள்ளார். இம்முறை மக்களால் வெளியிடப்பட்ட பிக் பாஸ் ப்ரோமோவும் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.

அதேபோல இந்த சீசனில் புதிய போட்டியாளர்களை ரசிகர்கள் எப்படி வரவேற்க ஆர்வமாக காத்திருக்கின்றார்களோ அதே போல விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்வார் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

இம்முறை பிக் பாஸ் வீட்டில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களாக தொகுப்பாளர் மாகாபா, சீரியல் நடிகை அக்ஷிதா, அமலா ஷாஜி, குரேஷி, ஷாலின் சோயா, டிடிஎப் வாசன், சம்யுக்தா விஸ்வநாதன், பூனம் பாஜ்வா, பப்லு பிரிதிவிராஜ், அருண் போன்ற பலரின் பெயர்கள் அடிபடுகின்றன.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பிரபல காமெடி நடிகராக செந்தில் மற்றும் மகாராஜா படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஆகியோர் கலந்த கொள்ள உள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளன.


விஜய் சேதுபதி இறுதியாக நடித்த மகாராஜா படத்தில் அவருக்கு மகளாக நடித்த சக்ச்சனா நமீதாஸ் பார்ப்பதற்கு சிறிய பெண் போல் இருந்தாலும் அவருக்கு 24 வயது என கூறப்படுகிறது. இவ்வாறு அவரும் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement