• May 04 2024

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புதிய மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகரான சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார். இந்தப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தின் முதல் பாடல் வரும் மே 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த படத்திற்காக சிம்பு 20 கிலோ வரை உடல் எடை குறைத்து முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

மேலும் சுந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி 'வெந்து தணிந்தது காடு' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement