• Jan 19 2025

என்னம்மா திடீர்னு இப்படி இறங்கிட்டீங்களே..!! துஷாரா விஜயனின் லேட்டஸ் கிளிக்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவின் மனைவி ஆக மாரியம்மாள் என்ற கேரக்டரில் தனது இயல்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் துஷாரா விஜயன்.

தனது முதல் படத்திலேயே தனது பேச்சாலும் இயல்பான நடிப்பாலும்  ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்து கொண்டார். இவர் அறிமுகமானது போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் தான். ஆனாலும் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்த படம் சார்பட்டா பரம்பரை படம் தான்.

இதை தொடர்ந்து பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்தார். அதிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.இவர் தற்போது தனக்கேற்ற சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.

அநீதி படத்தில் நடிகர் அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்பு ராயன் படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடிப்பில் அசத்தியிருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்திலும், விக்ரமின் வீர தீர சூரன் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தற்பொழுது பெரிய நடிகர்களின் படங்களின் கமிட்டாகி வரும் இளம்  நடிகையாக காணப்படுகிறார்.

இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் துஷாரா விஜயன், புதிதாக போட்டோ ஷூட் செய்து உள்ளார். தற்போது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement