• Sep 20 2024

விக்னேஷ் சிவன் வெளியிட்ட " LIC " வீடியோ... ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஷ்யம்...

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

இயக்குனர் விக்னேஷ் சிவன்சிலம்பரசன் டிஆர் மற்றும் வரலட்சுமி நடித்த போடா போடி படத்தின் மூலம் அறிமுகமான தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். பிறகு நானும் ரவுடி தான் திரைப்படத்தினை விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து எடுத்தார். 


நடிகர் சூர்யாவைவைத்து தான சேந்த கூட்டம்,  சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் என பல சுவாரஷ்யமான வெற்றிப்படங்களை கொடுத்தார். தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். 


சில குறும்படங்கள் எடுத்திருந்தாலும் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். இதனை அடுத்து இவரை இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. 


தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) என்ற  படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் மேலும் படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த விடியோவை ஷேர் செய்துள்ளார். 

Advertisement

Advertisement