• Mar 19 2026

‘ஜனநாயகன்’ எப்போது ரிலீஸ்.? தேர்தல் ஆணையத்தின் முடிவு முக்கியம் பிகிலு..

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் இறுதி படமான “ஜனநாயகன்” திரைப்படம் முதலில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், இந்த படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன், சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், அந்த வழக்கின் தீர்ப்பு சாதகமாக அமையாததால் ஜனநாயகன் படத்தின் வெளியீடு மேலும் தாமதமானது.

படத்தை வெளியிட பல முயற்சிகள் செய்த படக்குழு, இறுதியில் வழக்கை வாபஸ் பெற்று படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியது. அதன்படி, கடந்த மார்ச் 9ஆம் தேதி மறு ஆய்வு நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், குழுவில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில், “ஜனநாயகன்” படத்தில் அரசியல் சார்ந்த கருத்துகள் இடம்பெற்றுள்ளதால், இந்த படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்று தணிக்கை குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது மறு ஆய்வு நிறைவடைந்த நிலையில், பட வெளியீட்டுக்கான இறுதி முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பல நாட்களாக தள்ளிப்போன ஜனநாயகன் படத்தின் வெளியீடு, தற்போது தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்நோக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement