• May 08 2026

ரோகிணியிடம் வசமாக சிக்கிய தினேஷ்.. விஜயா வீட்டில் நடந்த கொண்டாட்டம்.?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், ஷோரூமில் நடந்த விஷயத்தை வீட்டிற்கு வந்து மனோஜ் கூறுகிறார். ஆனால் அந்த நேரத்தில், முத்து “நான் இருந்திருந்தால் இதை வேறு வழியில் டீல் பண்ணியிருப்பேன்” என்று கூறுகிறார்.

இன்னொரு பக்கம், கிரிஷ் மீனாவை பார்த்து பேசுகிறார். இதன் போது சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றை மீனா கிரிஷ்க்கு கொடுக்கிறார். அந்த நேரத்தில் விஜயா, மீனாவும் கிரிஷும் ஒன்றாக இருப்பதை பார்த்துவிடுகிறார்.

அதன் பின் அங்கு வந்த ரோகிணி, “மீனா எங்கு கூப்பிட்டாலும் நீ போகக் கூடாது” என்று கிரிஷ்க்கு கூறுகிறார். அந்த நேரத்தில் பி.ஏ. அங்கு வந்து, “எனக்கு பணம் வேண்டும். இல்லையென்றால் வீட்டில் உள்ளவர்களிடம் உன்னைப் பற்றிய உண்மையை சொல்லிவிடுவேன்” என்று மிரட்டுகிறார்.


இதைக் கேட்ட ரோகிணி, “உண்மையை சொல்ல வேண்டாம். என்னிடம் இப்போது பணம் இல்லை. அதுவும் முத்துவிடம் உண்மையை சொல்ல வேண்டாம்” என்று அழுது நாடகம் ஆடுகிறார். இதை நம்பிய பி.ஏ., முத்துவிடம் உண்மையை சொல்ல செல்லுகிறார்.

இறுதியில், விஜயாவின் வீட்டிற்கு வந்த மனோஜுக்கு பார்த்த பெண், வீட்டில் உள்ளவர்களை பெரியம்மா, பெரியப்பா, அண்ணா என அனைவரிடமும் உரிமையுடன் பேசுகின்றனர். இதனால் மனோஜ் சலிப்புடன் காணப்படுகிறார். இதுவே இன்றைய எபிசோடு.

Advertisement

Advertisement